ADVERTISEMENT

கொரோனா வைரஸ் பீதி... கிடுகிடுவென குறையும் கோழி விலை...!

09:46 PM Mar 09, 2020 | Anonymous (not verified)

கொரோனோ வைரஸ் அச்சத்தின் எதிரொலியாக தமிழகத்தில் பல இடங்களிலும் சிக்கன் விலை கிடு கிடுவென குறைந்து வருகிறது. 1 கிலோ கோழிகறி 200 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது 90 ரூபாய்க்கு விற்கபடுகிறது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்தாலும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திவரும் கொரோனோ, இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் ஏற்பட தொடங்கியுள்ளது. பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பதிவுகளில் பெரும்பகுதி உண்மை தன்மைகளை அறியாமல் பரப்புவதால் பொதுமக்கள் மேலும் மேலும் குழப்பம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோழிக்கறியில் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது, கோழிக்கறியை சாப்பிட்டால் கொரோனோ பாதிப்பு ஏற்படுவது நிச்சயம் என பலவாறாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதன்விளைவாக நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் கோழிக்கறியின் விலை மிகக்கடுமையாக சரிந்துள்ளது.



அந்த வகையில் கோழிகறி அதிகமாக விற்பனையாகும் டெல்டா மாவட்ட பகுதிகளான நாகை, நாகூர், திட்டச்சேரி, திருமருகல், சிக்கல், வண்டாபாளை, கூத்தாநல்லூர், ராஜகிரி, பாபநாசம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோழிக்கறியின் விலை கடுமையா குறைந்துள்ளது, விலை வீழ்ச்சியால் கடை உரிமையாளர்கள் மற்றும் சிறுகுறு வியாபாரிகளுக்கு பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், ஒருகிலோ 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரை விற்பனையான சிக்கன் தற்போது ஒரு கிலோ 90 மற்றும் 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறதென்றால் கொரோனோ வைரஸ் பரவுவது உண்மைதானோ என்கிற அச்சம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது.

கோழிக்கடை உரிமையாளர்களோ, தவறான தகவலால் பல லட்சம் ரூபாய் எங்களுக்கு இழப்பு ஏற்பட்டுவிட்டது. கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்குகூட ஊதியம் கொடுக்க முடியாதை நிலை ஏற்பட்டுவிட்டது. அரசு முறையாக ஆய்வு நடத்தி அறிக்கைவிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் எங்களுக்கு வாழ்வாதாரம் நிலைக்கும்," என்கிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT