Advertisment

போஸ் கொடுக்க வந்த எம்.எல்.ஏ.க்கள்... சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லையே...

‘கத்தியின்றி ரத்தமின்றி’ இப்போது உலகம் முழுக்க நடக்கும் யுத்தம்தான் கரோனா வைரஸ் தொற்று. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நாட்டு பட்ஜெட்டில் போர் கருவிகள் வாங்க, ராணுவ தளவாடங்கள் புதிது புதிதாய் இறக்குமதி செய்வதற்கு பல லட்சம் கோடிகளை, இந்தியா போன்றுள்ள ஒவ்வொரு நாடும் ஒதுக்குகிறது.

Advertisment

ஆனால் ஏவுகண, ராக்கெட், போர் விமானம் போன்ற் ஆயுதங்களைஅமெரிக்காவும், சீனாவும் ஏற்றுமதி செய்கிறது. இப்போது பாருங்கள் கண்ணுக்கு தெரியாத வைரஸ் யாரையும் விட்டு வைக்கவில்லை. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என எல்லோரும் வீட்டிலேயே இருங்க, தனித்திருங்க என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

Advertisment

தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான தி.மு.க. அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களுடன் வீடியோ கான்ஃபெரன்ஸில்அவரவர் பகுதியிலுள்ளமக்களுக்குஉதவ வேண்டும், களத்தில் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 Erode - admk mlas

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் முகமும் இப்போது தொகுதிகளில் தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.வி. ராமலிங்கம் ஆகியோர் இன்று ஈரோட்டில் தற்காலிக காய்கறி சந்தையாக செயல்படும் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்வது போல் மக்களிடம் தங்களது முகங்களை காட்டி விட்டுச் சென்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

எம்.எல்.ஏ.க்கள் இருவரும் முகக் கவசம் அணிந்து தங்களது கட்சியினருடன் கூட்டமாக வந்து சென்றது போலீசாரை முகம் சுளிக்க வைத்தது. மக்களுக்கு சமூக இடைவெளியைப் பற்றிகூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமாக வந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் இருந்தது சங்கடமாகத்தான் இருந்தது என கூறினார்கள்.

Market vegetables inspection ADMK MLAs Erode corona virus
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe