உலகில் வாழும் எல்லா உயிரினமும் வாழும் உரிமை பெற்றது. ஆனால் இப்போது மனித குலம் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மிகப் பெரிய மரண அச்சத்தில் உள்ளது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த வைரஸ் தொற்று அதிகம் பாதிப்பு ஏற்படுத்திய மாவட்டமாக ஈரோடு மாவட்டம் உள்ளது.

ஈரோட்டில் இருந்து ஒரு மாநாட்டிற்காக டெல்லி சென்று வந்த ஒரு குழுவினர் மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து மத பிரச்சாரத்திற்காக வந்த ஒரு குழுவினர் மூலமாகத்தான் மிகப்பெரிய அளவில் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் 24 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உள்ளதாக மருத்துவ துறை அறிவித்துள்ளது.

Advertisment

eeee

இந்த நிலையில் இன்று இரவு பொது சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது அறிவிப்பில் தமிழகத்தில் இதுவரை 124 பேருக்கு கரோணா வைரஸ் உறுதியானது என்றும் இதில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். அவர்களில் சுமார் 500 பேர் தான் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும் 500 பேருக்கு மேல் கண்டறியப்படவில்லை. இந்தநிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பலருக்கும் கரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.

இன்று மட்டும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்களுக்கு 50 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் கலந்து கொண்ட பலர் ரயில் மூலம் நேரடியாக தமிழகம் வந்துள்ளனர். சிலர் வேறு மாநிலத்திற்கு சென்று சாலை வழியாகவும் வந்துள்ளனர். அவர்கள் தாமாக முன்வந்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். இது ஒரு மருத்துவ ரீதியான பிரச்சனை. எனவே அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தங்களது தகவலை தெரிவிப்பது மிகவும் அவசியமாகும் என்று கூறியுள்ளார்.

Advertisment

மத்திய அரசு பல மாவட்டங்களை மிகவும் ஆபத்தான மாவட்டங்களாக இந்த வைரஸ் தொற்றில் அறிவித்திருப்பது ஈரோடு மாவட்டம் ஒன்றாக இருக்கிறது. ஈரோட்டில் உள்ள மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாங்களாக முன்வந்து தகவல் தெரிவித்தால் அதன் மூலமாக அவர்கள் தொடர்பு கொண்ட அவரோடு இருந்த நபர்களை கண்டறிந்து தனிமைப் படுத்தப் பட்டால் இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.