Advertisment

கேரளா மாணவிக்கு "கரோனா" -அச்சத்தில்  தமிழக-கேரள எல்லை!           

நிபா வைரஸ், ஸ்வைன் ப்ளு, டெங்கு காய்ச்சல், சிக்கன் குன்யா, என பல்வேறு வடிவங்களில் பல நாடுகளை அச்சுறுத்திய வைரஸ் நோய்களை இது வரை எந்த நாடும் அந்த வைரஸ் நோயை முமுமையாக ஒழிக்கவில்லை. மேலும் அந்த நோய் தாக்குதலால் ஆயிரக்கணக்கான உயிா் பலிகளும் நடந்துள்ள நிலையில் தற்போது அந்த வாிசையில் புதிதாக கரோனா வைரஸ் சீனாவை தாக்கியுள்ளது. அது சீனாவை மட்டுமல்லமால் மேலும் பல நாடுகளில் பரவ தொடங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisment

corona virus effect: Kerala-tamilnadu borders on fear

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

அந்த வகையில் சீனாவில் மருத்துவபடிப்பு படித்து வந்த கேரளா திருச்சூரை சோ்ந்த மாணவி ஓருவருக்கு கரோனா வைரஸ் தாக்கியிருப்பது சீனாவில் இருந்து கேரளா வந்தபோது விமான நிலையத்தில் வைத்து கண்டறியப்பட்டு தற்போது திருச்சூா் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் மாணவிக்கு கடந்த 3 நாட்களாக சிகிட்சை அளிக்கபட்டு வருகிறது.

மேலும் அங்கு 1417 போ் கண்காணிக்கபட்டு வருவதாகவும்,இதில் 36 பேருக்கு நோய் அறிகுறியிருப்பதாகவும் இதில் குறிப்பாக கண்காணிப்பில் திருச்சூாில் 125 பேரும், மலப்புரத்தில் 205 பேரும், எா்ணாகுளத்தில் 195 பேரும், கோழிக்கோட்டில் 214 பேரும் என்ற புள்ளி விவரத்தை கேரளா சுகாதார அமைச்சா் சைலஜா கூறியுள்ளாா். மேலும் 3 மாணவிகளுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினாா்.

corona virus effect: Kerala-tamilnadu borders on fear

இதையடுத்து கேரளாவில் மத்திய பகுதியில் உள்ள மலையாளிகள் அச்சம் அடைந்துள்ளனா். மேலும் திருச்சூா் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதோடு அங்கு படித்து வரும் மாணவ மாணவிகள் பெரும்பாலானோா் விடுப்பில் சென்று விட்டனா். இதற்கிடையில் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை போா்கால அடிப்படையில் மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

பல மருத்துவமனைகளில் இதற்கென்று தனிவாா்டுகள் அமைக்கப்பட்டு மருத்துவா்களும், ஊழியா்களும் தயாா் நிலையில் இருக்கிறாா்கள். அதேபோல் மருந்துகளும் அதிகளவு இருப்பு உள்ளது. இது ஒரு அறிகுறிதான் தவிர அது பரவுவதை தடுத்து விடுவோம் என கேரளா அரசு கூறியுள்ளது.

corona virus effect: Kerala-tamilnadu borders on fear

இதற்கிடையில் சீனாவில் இருந்து வந்த மாணவிகளுக்கு கேரளாவில் நோய் உறுதி படுத்தப்பட்டுள்ளதால் எல்லையில் இருக்கும் குமாி மாவட்டத்திலும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா். காரணம் தினமும் இரு மாநில மக்களும் வேலை, மருத்துவம், கல்விக்கு ஏராளமானோா் அங்குமிங்கும் செல்வதால் அச்சத்தில் இருக்கிறாா்கள். இதனால் நாகா்கோவில் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் 4 பெட்டுகள் கொண்ட தனி ஐஸ்லேசன் வாா்டு தொடங்கப்பட்டு அதற்கு தனி மருத்துவா்கள் நியாமிக்கபட்டு இருப்பதாகவும் டீன் சுகந்தி ராஜகுமாாி கூறினாா்.

border Kerala Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe