ADVERTISEMENT

60 மாதங்கள் கழித்து துபாயில் இருந்து வந்த கணவர்... பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற மருத்துவர்கள்... கண்ணீரோடு நின்ற மனைவி...!

11:11 PM Mar 19, 2020 | Anonymous (not verified)

துபாயில் இருந்து கோரெண்டல் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 143 பயணிகள் மதுரை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். தொடர்ந்து பயணிகளுக்கு மதுரை விமான நிலையத்தில் கரோனா அறிகுறிகள் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து அவர்களை இரண்டு கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செல்ல 5 அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT



இரண்டு குழுக்களாக பயணிகளை பிரித்து ஒரு குழுவினரை மதுரை சின்ன உடப்பு பகுதியில் உள்ள அரசு கூட்டுறவு பயிற்சி கல்லூரிக்கும் (120 படுக்கை வசதி), மற்றொரு குழுவினர் ஆஸ்டின்பட்டியில் உள்ள தனியார் கல்லூரிக்கும் (60 படுக்கை வசதிகள்) கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் 14 தினங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பயணிகள் நீண்ட நேரமாக தண்ணீரும், உணவும் வழங்காமல் பரிசோதனை என்ற பேரில் காலதாமதகம் செய்துவருவதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கண்காணிப்பு மையத்திற்கு அழைத்து செல்வதற்கான பேருந்து வந்த போது பயணிகள் அதில் செல்ல மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கரோனா குறித்து பரிசோதனை விமான நிலையத்திலேயே பண்ணவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 60 மாதத்திற்கு முன் கணவன் துபாய்க்கு சென்று திரும்பி வந்தவரை அவரது மனைவியும் குழந்தையும் கண்ணீர் மல்க கண்காணிப்பு மையத்திற்கு சென்று தங்குமாறு கூறிய நெகிழ்வான சம்பவத்தால் பரபரப்பாக இருந்த விமான நிலையத்தில் சிறிது நேரம் அமைதி நிலவியது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT