சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனராக இருந்த, 55 வயது மருத்துவர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நேற்று (19/04/2020) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து, அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் கடந்த வாரம் வானகரம் தனியார் மருத்துவமனையில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/22_25.jpg)
இது தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவர் உடல் அடக்க விவகாரத்தில்ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)