கரோனா வைரஸ் நோய் தடுக்கும் வகையில் தி.மு.க.வினர் களப்பணியாற்ற வேண்டும், பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு செய்திருந்தார். இந்த நிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று வீரப்பன் சத்திரம் பகுதியில் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமி வழங்கினார்.
அதே போல் தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு, அரிசி மளிகை பொருட்களும் வழங்கினார். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் உணவு பொருட்கள் தி.மு.க.சார்பில் கொடுக்கப்பட்டது.