கரோனா... ஈஷா மையத்தில் ஆய்வு செய்ய கோவை மக்கள் கோரிக்கை 

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்களை முதலில் அடைக்க சொன்ன அரசு, அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தது. தற்போது ஏப்ரல் 14ஆம் தேதி வரை நோய் தொற்று ஏற்படாமல் இருக்க மக்கள் தனித்திருப்பதற்காக இந்தியா முழுவதும்ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.

coimbatore

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி சிவராத்திரி கொண்டாட்டத்தை கோவை ஈஷா மையத்தில் நடத்தினார் ஜக்கிவாசுதேவ். அதில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதாகவும், வந்தவர்கள் அனைவரும் திரும்பச் சென்றுவிட்டார்களா என்றுசந்தேகம் எழுந்திருப்பதாகவும்,இதனால் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு இந்த நோய் தொற்று இருக்கிறதா? பரிசோதனை செய்யப்பட்டுவிட்டதா? என்று பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

கரோனா வேகமாக பரவி வந்த நிலையில்தான் கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம் நடந்தது. ஈஷா யோகா மையத்தில் அரசு ஆய்வு செய்துமக்களுக்கு உண்மையை தெரிவித்திட வேண்டும் என்கிறார்கள் கோவை பகுதியினர்.

Coimbatore corona virus Isha
இதையும் படியுங்கள்
Subscribe