சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு!

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

 corona virus - Chidambaram Natarajar Temple

இதற்கிடையில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் நடராஜர் கோயில் வரும் மார்ச் 31-ந் தேதி வரை மூடப்பட்டுள்ளது. கோயிலின் உள்ளே பூஜைகளை தீட்சிதர்கள் எப்போதும் போல செய்து வருகிறார்கள். தீட்சிதர் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் கரோனாவை தடுக்கும் வகையில் கோவில் வளாகம் முழுவதும் சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா தலைமையில் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கிருமி நாசினி மருந்து கலந்த தண்ணீரை தெளித்தனர்.

Chidambaram Natarajar temple corona virus
இதையும் படியுங்கள்
Subscribe