

Published on 12/04/2020 | Edited on 12/04/2020
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க கடந்த 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் மீறி சென்னையில் அத்தியாவசியமின்றி வாகனங்களில் வெளியே சுற்றும் வாகன ஓட்டிகளை பிடித்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர் போக்குவரத்து போலீசார்.
இதனால் போலீசாருக்கு கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் சென்னை காவல்துறை சார்பில் அனைத்து போலீசாருக்கும் முகத்தை முழுவதுமாக மூடும் வகையில் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. எழும்பூரில் போக்குவரத்து போலீசார் பிளாஸ்டிக் முக கவசம் அணிந்து பணியில் ஈடுப்பட்டனர்.