Advertisment

போலிஸார் நடத்திய கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி!

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் நோயில் இருந்து பொதுமக்கள் தற்காத்துக்கொள்வது குறித்தான விழிப்புனர்வு நிகழ்ச்சிகள் காவல்துறையினர் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

Advertisment

அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் காவல்துறையின் சார்பில் கடைவீதியில் இன்று 13.04.2020 ம் தேதி காலை 11.30 மணிமுதல் 12.00 மணிவரை கரோனா வைரஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தினர்.

Advertisment

நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக கரோனா வைரஸ் குறித்தான படம் ஒன்றை பிரமாண்டமாகக் கடைவீதியில் வரைந்து வைத்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அதோடு அனைவருக்கும் முகக்கவசம், துண்டு பிரசுரம்,கிருமி நாசினிகளைக் கொடுத்தனர்.

கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் திருவிடைமருதூர் டி.எஸ்.பி. துவக்கி வைத்தார், பந்தநல்லூர் ஆய்வாளர் சுகுனா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா மற்றும் காவலர்களும், பொதுமக்களும், சமுக ஆர்வளர்களும், சமுக இடைவெளியைக் கடைபிடித்துநிகழ்ச்சிக்கு வலு சேர்த்தனர்.

awareness corona virus Program Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe