சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கும் அதிகாரிகளும் பணியாளர்களும் இணைந்து ‘தமிழ் மன்றம் ‘ என்ற பெயரில் இலக்கிய அமைப்பைத் தொடர்ந்து நடத்திவருகின்றனர். பிரபல கவிஞர்களை நடுவர்களாகக் கொண்டு அடிக்கடி கவிதைப் போட்டிகளையும் நடத்தி இலக்கியம் வளர்த்து வருகின்றனர்.

இப்போது கரோனா ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடிக்கு இடையிலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள், ’கரோனா விழுப்புணர்வுக் கவிதைப் போட்டி’யை, ’இனிய உதயம்’ இலக்கிய இதழுடன் இணைந்து இணையத்தில் நடத்தினர். இதில் பெரும் ஆர்வத்தோடு அதிகாரிகளும் பணியாளர்களும் பெருமளவில் பங்கேற்று, கொரோனா விழிப்புணர்வுக் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள்.

Advertisment

போட்டியில் முதல் ஐந்து இடத்தைப் பெற்ற கவிதைகளுக்கு, ஊக்க மூட்டும் வகையில் சிறு தொகைப் பரிசையும் வழங்குகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளுடன் மேலும் சில சிறப்பான கவிதைகளும் இனிய உதயத்தில் பிரசுரிக்கப்பட இருக்கின்றன. நிர்வாகம் தொடர்பான வேலைப்பளு, பதட்டம், அச்சம், இவற்றுக்கு நடுவிலும் கொரோனா விழிப்புணர்வுக் கவிதைகளை எழுதிய, அவர்களைப் பாராட்டத்தான் வேண்டும்.