டெல்லியில் நடந்த நிகழ்சசியில் பங்கேற்ற 10 பேருக்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பரிசோதனை நடந்து வருகிறது.

Advertisment

டெல்லியியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யும் பணிகள் தீவிமாக நடந்து வருகிறது.

Advertisment

இதில் புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, புத்தாம்பூர், அரசர்குளம், அன்னவாசல், நெடுங்குடி மற்றும் அறந்தாங்கி எல்.என் புரம் பகுதியைச் சேர்ந்த 10 பேர் கடந்த 22ந் தேதி முதல் 24 ந் தேதி வரை டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் 24ந் தேதி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

pudhukottai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்த நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய அரசு உத்தரவிட்டது. அதன்படி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேரையும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை வார்டில் சேர்த்து அவர்களை பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கும் படி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி நேற்று இரவு 10 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கும் இரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.