கோவை சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையில் கரோனோ தொற்று பாதிப்பின் காரணமாக பதினாறு நாட்களாய் அனுமதிக்கப்பட்டிருந்தார் இளம் பெண் ஒருவர். நேற்று நள்ளிரவு அந்த இளம்பெண் யாருக்கும் தெரியாமல் ஆஸ்பத்திரியை விட்டு ஓடி விட்டார்.

Advertisment

  Corona virus affected Young girl issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிராவாகம் அருகிலுள்ள சிங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது. சம்பவ இடத்திற்கு சிங்காநல்லூர் ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் திரண்ட போலீசார் தப்பி ஓடிய பெண்ணை தேடி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் வசந்தா மில் அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகம் பஸ் ஸ்டாப்பில் அருகே கையில் ஸ்டிக்கர் அச்சிடப்பட்டிருந்த அந்த இளம் பெண் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில், அந்த பெண்ணுடன் வந்தவர் அவரை அங்கேயே விட்டு சென்று விட்டது தெரிய வந்தது.

உடனே போலீசார் அந்த மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்ததோடு, 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்து அந்த நோயாளியை அவர் முதலில் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே இரவில் தப்பி ,அதிகாலையில் பிடிபட்ட அந்த இளம் பெண் மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.