Advertisment

''விஜயபாஸ்கர் மனைவிக்கும், மகளுக்கும் கரோனா'' - வழக்கறிஞர் பாபு முருகவேல் தகவல்!

 '' Corona for Vijayabaskar's wife and daughter '' - Babuvel Information!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், 2016ஆம் ஆண்டு 6 கோடியே 41 லட்சம் ரூபாய் சொத்து மதிப்பைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 2021ஆம் ஆண்டில் சொத்து மதிப்பாக 58 கோடி ரூபாயைக் காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அவரது மனைவி, மகள் பேரிலும் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. புதுக்கோட்டையில் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி வீட்டில் 3 மணிநேரம் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, அவரது மூத்த மகள் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். கரோனா பாதிப்பு காரணமாக இருவரும் வீட்டில் தனிமையில் இருக்கிறார்கள் என்றும் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார்.

former minister police vijaybaskar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe