Advertisment

உலகம் முழுக்க கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசிகள் பெரும் பங்கு வகித்துவருகின்றன. தற்போது இந்தியாவில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று முதல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சென்னை, அஷோக் நகரில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கிவைத்தனர். இந்நிகழ்வில் சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் சைதை மகேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.