Advertisment

தமிழகத்தில் முதல் நாள் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறித்த புள்ளிவிபரங்கள்....

corona injected to people in 160 centres

கரோனாபரவலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் ‘கோவிஷீல்ட்’, ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜனவரி 16 முதல்கரோனாதடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது .

Advertisment

அதன்படி தடுப்பூசி வழங்கும்திட்டத்தைபிரதமர் நரேந்திர மோடி இன்று (16/01/2021) தொடங்கி வைத்தார்.தமிழகத்தைப்பொருத்தவரை, மதுரையில்கரோனாதடுப்பு ஊசி போடும்நிகழ்வைதமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.

Advertisment

தமிழ்நாட்டில் 160 மையங்களில்கோவிஷீல்ட்தடுப்பூசியும், 6 மையங்களில்கோவாக்சின்தடுப்பூசியும்பொதுமக்களுக்குபோடப்பட்டது,.கோவாக்சின்தடுப்பூசி 600பேருக்குசெலுத்தத்திட்டமிடப்பட்ட நிலையில் 99 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.

பெரம்பலூரில் இன்று 100பேருக்குத்தடுப்பூசிசெலுத்தத்திட்டமிடப்பட்ட நிலையில், 2 பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது.மிகக்குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசிசெலுத்தப்பட்டிருப்பதற்குதயக்கம் காரணமா என ஆய்வு செய்துவருவதாகதமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 2684 பேர்கோவிஷீல்ட்தடுப்பூசியும், 99 பேர்கோவாக்சின்தடுப்பூசியும் என மொத்தம் 2783 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதுதவிரஆறு லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவிருப்பம் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

corona coronavirus vaccine covaxin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe