கரோனா தடுப்பூசி திட்டம்... முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

 Corona vaccination program ... PM consults with chief ministers

வருகின்ற16 ஆம் தேதி முதல், இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிசெலுத்தும் பணி தொடங்கும்எனமத்திய அரசு அறிவித்திருந்தது.

கரோனாதடுப்பூசி செலுத்துவதில்,முன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன்பிறகு 50 வயதிற்குக் கீழுள்ள, இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனாதடுப்பூசிசெலுத்தப்படும் எனவும்மத்திய அரசுதெரிவித்திருந்தது.இதற்காகசீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி கோவிஷீல்டுதடுப்பூசிகளை மத்திய அரசு தற்பொழுதுகொள்முதல் செய்துள்ளது. அதேபோல் பாரத் பையோ டெக் நிறுவனத்தின் கோவாக்சீன் தடுப்பூசியும் கொள்முதல் செய்யப்படும் எனவும்தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கரோனா தடுப்பூசிசெலுத்தும் திட்டம் குறித்துமாநிலமுதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிவாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தமிழகம் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் ஆகியோர்கலந்துகொண்டுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கரோனாதடுப்பூசிசெலுத்தும் திட்டம்குறித்த அனைத்து அம்சங்களும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

corona virus edappadi pazhaniswamy modi VACCINE
இதையும் படியுங்கள்
Subscribe