ADVERTISEMENT

தமிழகத்தில் இரண்டாம் நாளாக கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!

09:15 AM Jan 17, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பல நாடுகள், முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முதற்கட்டமாக 166 மையங்களில் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. 160 மையங்களில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியும், 6 மையங்களில் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றும் அதே மையங்களில் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT