நேரு உள்விளையாட்டு அரங்கில் கரோனா தடுப்பூசிமுகாமை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். இதில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயது முதல் 59 வயதிற்குட்பட்டவர்களும் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் மக்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 20 மருத்துவக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று இந்த முகாமில், பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.