தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்துவருகிறது. அதேவேளையில் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும், மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான முக்கிய வழியாக பார்க்கப்படுகிறது. அதனால், பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களை அமைத்து கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திவருகிறது மாநில அரசு. அந்தவகையில், இன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீனவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது மற்றும் தடுப்பூசிகளும் போடப்பட்டது.