Advertisment

திருவல்லிகேணியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாம்..! (படங்கள்)

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை மக்களைக் கடுமையாகப்ப் பாதித்து வருகிறது. அதனால் பல மாநிலங்களிலும் முழு ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் கரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கானது அமலில் உள்ளது.

Advertisment

மேலும், கரோனா இரண்டாம் அலையிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழக அரசு மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தமிழக அரசின் அறிவுரைப்படி அனைத்து வயதினரும் விரைவாக சுய விருப்பத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான தீவிர நடவடிக்கைகள் அதிகாரிகள் எடுத்துவருகின்றனர். அந்த வகையில் திருவல்லிக்கேணி புவி தெருவில் மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Advertisment

coronavirus vaccine thiruvallikeni Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe