
திருச்சி மாவட்டத்தில் கரோனா நோயைத்தடுக்கும் பொருட்டு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதியானநாளைமாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தத்தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் தேதி தடுப்பூசி முகாம்களை நடத்துவது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தப்பட்டு ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தற்போது திருச்சி மாவட்டத்தில் 12 ஆம் தேதி 6150 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தி ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 500 பேருக்குத்தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Follow Us