Advertisment

"579 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்"- ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகவல்!

publive-image

தி.மு.க. அரசு அமைந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில்கரோனாதாக்கத்தைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரண்டாம்கட்டமாகச்செப்டம்பர் 19- ஆம் தேதி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த நிலையில் மூன்றாவது கட்டமாக நாளை (26/09/2021) மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலககூட்டரங்கில்மாவட்ட ஆட்சியர்கிருஷ்ணனுன்னிதலைமையில் நடைபெற்றது.

Advertisment

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்கிருஷ்ணனுன்னி, "கரோனாவைகட்டுப்படுத்தசெப்.12 மற்றும்செப். 19- ல் இரண்டுகட்டமாகத்தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது. மூன்றாம் கட்டமாக நாளை (26/09/2021) ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து, 579 இடங்களில் இந்த முகாம்நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள்,பஞ்சாயத்துச்செயலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள்கொண்டகுழு அமைத்து தடுப்பூசி முகாம் அமைந்துள்ள ஒவ்வொரு இடங்களிலும் தேவையான அடிப்படைவசதிகளைச்செய்து,ஒவ்வொருமையத்திலும் தலா 200 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்ததிட்டமிடப்பட்டுள்ளது.

Advertisment

கூட்டத்தைக்கட்டுப்படுத்தவும்,டேட்டாவைபதிவு செய்யகல்லூரிமாணவர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்துவதோடு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும். இது தவிர,தொழிற்சாலைகள்,தொழிலாளர்கள்உள்ள இடங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுமுயற்சியாகச்செயல்பட வேண்டும்" என்றார்.

Erode camps coronavirus vaccine
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe