தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 10,576 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் மொத்தம் 111 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றுவரை சென்னையில் 9989 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 587 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576 ஆக பதிவாகியுள்ளது. இன்று 765 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 833 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும், இன்று ஒரேநாளில் தமிழகத்தில் 8 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.