Advertisment

கரோனா இன்றைய அப்டேட்: பாதிப்பு - 2,812 ; டிஸ்சார்ஜ் - 11,154

hghg

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை 32 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு, தற்போது பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 2812 ஆக பதிவாகியுள்ளது. நேற்று 3086 ஆக பாதிப்பு பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 546 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 590 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,904 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 11 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது வரை 47,902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 11,154 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 33.48 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதற்கிடையே இன்று மட்டும் 1,05,822 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe