ADVERTISEMENT

மீண்டும் ஊரடங்கா..? கோட்டையில் எடப்பாடி பழனிசாமி!

08:19 AM Apr 12, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த இன்று (12.04.2021) தலைமைச் செயலகத்துக்கு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலானதற்குப் பிறகு தலைமைச் செயலகத்துக்கு வருவதை தவிர்த்தார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் பரப்புரையின்போது அவர் சென்னை வந்தபோதும், கோட்டை பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.

தேர்தல் நடந்து முடிந்திருப்பதால், புதிய அரசு பொறுப்பேற்கும் வரையில் காபந்து அரசின் முதல்வராகத்தான் எடப்பாடி பழனிசாமி நீடிக்கலாமே தவிர, முதல்வருக்குரிய அதிகாரங்களை முழுமையாக செலுத்த முடியாது. இந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடனும் உயரதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்தவிருப்பது விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. அரசு சார்ந்து சில முடிவுகளை மேற்கொள்ள, காபந்து அரசின் முதல்வராக இருப்பவர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தலாம். அத்தகைய அனுமதியைப் பெற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறது கோட்டை வட்டாரம்.

கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் அரசு மருத்துவமனைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தடுப்பு மையங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத்துறை இறங்கியுள்ளது. இந்தச் சூழலில், “எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில், ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம். மத்திய அரசிடமிருந்து சில தகவல்களைப் பெற்றிருக்கிறார்கள்; அதுவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம்” என்கிறார்கள் சுகாதாரத்துறையினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT