jkl

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 5,546 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,277 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் சில தினங்களுக்கு பிறகு 1,000க்கும் அதிகமாக கரோனா தொற்று பதிவாகி உள்ளது. மற்ற மாவட்டங்களிலும்பாதிப்பு எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 5,91,943 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 5,501 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,36,209 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,453 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் இதுவரை 85,997 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 72.67 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Advertisment