kjl

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 30,580 ஆக பதிவாகியுள்ளது. நேற்றைய எண்ணிக்கை 30,769 ஆக பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 6,384 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 6,781 என்று இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,218 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2,00,954 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 24,283 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 28,95,143 பேர் மொத்தமாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,57,648 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.