
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக 1,500 என்ற எண்ணிக்கையை ஒட்டியே தினசரி பாதிப்பு இருந்து வருகிறது. பெரிய அளவில் வித்தியாசமில்லாமல் தொடர்ந்து கரோனா பாதிப்பு சீராக இருந்து வரும் நிலையில், தமிழகத்தில் இன்று 1,562 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 166 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 200க்கும் குறைவான கரோனா தொற்று பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்புக்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 26,17,943 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மட்டும் சிகிச்சை பெற்றுக் குணமானவர்களின் எண்ணிக்கை 1,648 ஆக உள்ளது. இதன் மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 25,66,504 ஆக அதிகரித்துள்ளது. இன்று கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,941 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,60,523 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாகத் தமிழ்நாட்டில் 4,26,33,164 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 16,478 பேர் சிகிச்சையில் உள்ளனர்.