ADVERTISEMENT

இன்று ஒரே நாளில் 85,473 மாதிரிகள் பரிசோதனை -மற்ற மாநிலங்களை ஒவர்டேக் செய்யும் தமிழகம்!

09:56 PM Sep 10, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு, தினமும் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் இன்று 5,528 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 991 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது வாரமாக 1,000-க்கும் குறைவாக கரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 4,86,052 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாணவர்களின் எண்ணிக்கை 5,633 ஆக உள்ளது.

இதன் மூலம் இதுவரை குணமாணவர்களின் மொத்த எண்ணிக்கை 2,56,313 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உள்ளது. இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,154 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை 56.30 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 85,473 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT