Skip to main content

பாதிப்பு 3,094; டிஸ்சார்ஜ் 4,403 -கரோனா இன்றைய அப்டேட்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020
ghjk

 

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகின்றது. 

 

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 857 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் இன்றும் ஆயிரத்துக்கும் குறைவாக தொற்று பதிவாகி உள்ளது. மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 6,94,030 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 4,403 ஆக உள்ளது. இதன்மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 6,46,555 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,741 ஆக அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்