ரப

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 81 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 9000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 1,50,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில் இன்று கரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி இன்று மட்டும் 1,515 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 919 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 13 நாட்களுக்கு பிறகு முதல் முறையாக 1000 என்ற எண்ணிக்கைக்கு கீழ் சென்னையில் கரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உள்ளது. இதன் மூலம் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 528 ஆக அதிகரித்துள்ளது.