/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dsg_41.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. ஆறுலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது தினமும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகின்றது. தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,130 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 18வது நாளாக இரண்டாயிரத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளது. ஆனால் பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து தமிழகம் முழுவதும் இதுவரை 1,80,643 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 4,894 ஆக உள்ளது. இதன்மூலம் இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,670 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 2,626 ஆக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)