தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..?

nm

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 6 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 1,391 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 356 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 45 நாட்களாகத் தொடர்ந்து 1,000 -க்கும் குறைவாகக் கரோனா தொற்று, பதிவாகி உள்ளது. ஆனால், பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து இருந்துவருகிறது. இன்றைய பாதிப்புகளையும் சேர்த்து, தமிழகம் முழுவதும் இதுவரை 7,87,554 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும், சிகிச்சை பெற்று குணமானவர்களின் எண்ணிக்கை 1,426 ஆக உள்ளது.

இதன் மூலம், இதுவரை குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 7,64,854 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது. இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,762 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 70,378 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் 1,23,34,477 பரிசோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe