jkh

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி உலகை அச்சுறுத்தி வருகிறது. லட்சகணக்கான மக்கள் இந்நோய்க்காரணமாக பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்தை நெருங்க இருக்கின்றது. மாவட்டங்களில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடைந்துள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மிகத் தீவிரமாக இருந்து வருகின்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 9,917 ஆக உள்ளது. காஞ்சிபுரத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,029 ஆக உள்ளது. அதில் 2,543 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,511 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். 66 பேர் மரணமடைந்துள்ளார்கள்.

Advertisment