
தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக, இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,393 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 90,167 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2,325 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,074. சென்னையில் மட்டும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்று 60 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,201 அதிகரித்துள்ளது.