
தமிழகத்தில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்புகள்படி, 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 ஆவது நாளாக சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,227 தமிழகம் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339 ஆக அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாகவும் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகின்றது. பல மாவட்டங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:
சென்னை - 1,380
திருவள்ளூர் - 156
செங்கல்பட்டு - 146
மதுரை - 137
தி.மலை - 114
காஞ்சிபுரம் - 59
தேனி - 48
திண்டுக்கல் - 44
கள்ளக்குறிச்சி - 43
திருச்சி - 41
தூத்துக்குடி - 38
வேலூர் - 36
கடலூர் - 29
ராணிப்பேட்டை - 29
விருதுநகர் - 26