கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று தமிழகத்தில் மேலும் 64பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,885ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில்60 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் தமிழகத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

Corona for two policemen in Madurai ... !!

இந்நிலையில்மதுரையில் தெற்குவாசல் காவல் நிலையத்தைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போக்குவரத்து தலைமை காவலர் ஆகிய இருவருக்கும் கரோனாஇருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அந்த காவல் நிலையத்தின் உள் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஒரு பக்க கதவு பூட்டப்பட்டது. மேலும் நாளை முதல் தெற்குவாசல் காவல் நிலையம் தற்காலிகமாக வேறு இடத்தில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.