தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில்30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
இந்நிலையில்வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கரோனாஉறுதியானதால், வேலூரில் மொத்த பாதிப்பு என்பது 888 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 96 பேருக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மேலும் 55 பேருக்கு கரோனாஇன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை அங்கு 422 ஆக உயர்ந்துள்ளது. இதில் கரோனாஇல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில் தற்போது மேலும் 13 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்தில்கரோனாபாதிப்பு மும்மடங்காக அதிகரித்துள்ளதுஎன்றும் கூறப்படுகிறது.