தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் கரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் போர்க்கால முறையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட சென்னையை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்கள் என 60 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் அனைவரும் இன்று (26.06.2020) பணிக்கு திரும்பினர்.
பணிக்கு திரும்பிய அவர்கள் அனைவரையும் உற்சாகம் ஊட்டும் வகையில், தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை எழும்பூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்தில் வரவேற்றார்.