
தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தற்போது கரூர் காகித நிறுவனத்தில் 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இணைந்து அமைத்துள்ள, 200 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைக் காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் க.சிவகாமசுந்தரி, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் பிரசாந் மு வடநேரே TNPL ஆலை, E.D.O SVR.கிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், ஆகியோர் கலந்து கொண்டனர்.