/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raja muit444.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடலூர் மாவட்ட கரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரோனா ஆய்வக பரிசோதனையும் இங்கு நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனையை கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உள்பட 40 பேர்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 12- ஆம் தேதி முதல் ஜனவரி 23- ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி முதல்வர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
மேலும் விடுதியில் தங்கியுள்ள மருத்துவ மாணவர்கள் உடனடியாக விடுதி அறையை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Follow Us