Advertisment

கரோனா பரவலை தடுக்க கிரிவலத்திற்கு தடை!

thiruvannamalai

Advertisment

கரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இருந்து வரும் இந்த தடை உத்தரவில் இருந்து ஜூன் 1ந் தேதி முதல் பல விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இருந்தும் எங்கும் கூட்டம் கூடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை வலம் என்கிற கிரிவலம், தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 5 லட்சத்துக்கும் குறையாமல் பக்தர்கள் வருவார்கள். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கிரிவலம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. யாரும் கிரிவலம் வரமுடியாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் ஜீன் 5ந் தேதி பௌர்மணி. இன்று கிரிவலம் வர அண்ணாமலையார் பக்தர்கள் முடிவு செய்துயிருந்தனர். அதற்கு தடை என ஜூன் 3ந்தேதி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 444 கரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் 320 பேருக்கான மருத்துவ சிகிச்சை நடைபெற்றுவருகிறது. 300 கரோனா நோயாளிகள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தவர்கள், இவர்களால் கரோனா மாவட்டமாகி சிவப்பு மண்டலத்தில் உள்ளது. இதனால் ஜூன் 1ந்தேதி மற்ற மாவட்டங்களுக்கு தரப்பட்ட பல சலுகைகள் இங்கு இல்லாமல் உள்ளது.

Advertisment

இந்நிலையில் கிரிவலத்துக்கு அனுமதி வழங்கி மக்கள் வரத்துவங்கினால் இன்னும் நோய் பரவும் என்பதால் கிரிவலத்துக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பௌர்மணியன்று பக்தர்கள் யாரும் கிரிவலம் வரமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுவருகிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி.

girivalam thiruvannamalai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe