Skip to main content

முதல்வர் வருகையால் குறைந்துபோனதா கரோனா பரிசோதனை?

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

edappadi palanisamy

 

திருவண்ணாமலைக்கு, கரோனா தொடர்பான அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் செப்டம்பர் 4 -ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வர இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகம் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு, கூட்ட அரங்கு சீர் செய்யப்படுகிறது.

 

இந்நிலையில் முதல்வர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும்போது, கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கரோனா பரசோதனை மாவட்டம் முழுவதும் குறைக்கப்பட்டுள்ளது என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. அதற்குக் காரணம் மாவட்ட நிர்வாகம் தினமும் வெளியிடும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தே வருவதுதான்.

 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிகளவு கரோனா நோயாளிகள் இருந்தனர். தினமும் 100 நபர்களுக்கு குறையாமல் கரோனாவால், மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் தினசரி பட்டியலில், கடந்த சில தினங்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி 61 நபர்களும், 22ஆம் தேதி 87 நபர்களும், 23ஆம் தேதி 100, 24ஆம் தேதி 145, 25ஆம் தேதி 102, 26ஆம் தேதி 58, 27ஆம் தேதி 99, 28ஆம் தேதி 205 நபர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்படி வேகமாகக் குறைய வாய்ப்பேயில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு.

 

இது உண்மையா என மருத்துவ அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, பரிசோதனை செய்கிறோம், அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும்மில்லை என நழுவுகிறார்கள்.

 

இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தரப்பில் கேட்டபோது, ஆரம்பம் முதலே பரிசோதனை எண்ணிக்கை அதிகமாக வைத்திருந்தது திருவண்ணாமலை மாவட்டம். அதேபோல் பிறமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு பெரும்பான்மையானவரை தனி முகாமில் வைத்துப் பரிசோதனை முடிவுக்கு பின்பே அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் தொடக்கத்தில் அதிகளவு நோயாளிகள் வந்தனர். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மற்ற மாவட்டங்களில் செய்யவில்லை. நாம் முன்னெச்சரிக்கையாக எல்லா வசதிகளையும் செய்திருந்தோம், அனுமதித்தோம், உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களைக் குணமாக்கி அனுப்பினோம். இதனால் தற்போது நமது மாவட்டத்தில் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மற்ற மாவட்டங்கள் ஆரம்பத்தில் போதிய அக்கறை செலுத்தவில்லை. தற்போதுதான் மற்ற மாவட்டங்கள் அதிகளவில் பரிசோதனை நடத்துகின்றனர். பரிசோதனை அதிகரிக்கும்போது அதிகளவு நோயாளிகள் தினமும் கண்டறியப்படுகிறார்கள். அதனால் நம் மாவட்டத்தை விட அதிகமாக தெரிகிறது. இதுதான் காரணமே தவிர, பரிசோதனை எண்ணிக்கையைக் குறைக்கவில்லை.

 

AD

 

கடந்த மாதம் 25 -ஆம் தேதி எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டதோ, அதே அளவில் தான் இன்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. சில தினங்கள் குறைந்த அளவு பாசிட்டிவ் கேஸ்கள் வருகிறது, பல நாட்கள் அதிகளவு வருகிறது. நீங்கள் நன்றாக தினசரி டேட்டாவை பாருங்கள், உண்மை தெரியும் என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.