
உலகம் முழுக்க இன்னும் கரோனா தொற்று பரவல் இருந்துகொண்டிருக்கிறது. அதனால், விமான நிலையங்களில் பன்னாட்டு பயனிகளுக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
அதன்படி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெளி நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின்பு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், கடந்த சில தினங்களாக இந்த சோதனை முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை முதல் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சிங்கப்பூரிலிருந்து வந்த பயணிகளுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பயணிகளிடம் இருந்து 900 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.