Published on 29/04/2021 | Edited on 29/04/2021

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், வருகிற மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் நாளான மே 2ஆம் தேதி அன்று வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்லும் அனைவருக்கும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி முதலில் கரோனா பரிசோதனை மேற்கொள்வது மிக முக்கியமானது என அரசும் தேர்தல் ஆணையமும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று, வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படும் செய்தியாளர்கள், புகைப்பட கலைஞர்கள் ஆகியோருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரிசோதனையானது எடுக்கப்பட்டது. இதில் திருச்சி நகரப்பகுதி மற்றும் மாநகர பகுதிகளில் இருந்து வந்த செய்தியாளர்கள் பரிசோதனை செய்துகொண்டனர்.