tamil mani

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடேசன் நகரைச் சேர்ந்தவர் தமிழ்மணி (66). ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான இவர் தனது மனைவியுடன் வீட்டில் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்குச் சளியும் காய்ச்சலும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று கரோனா உமிழ்நீர் டெஸ்ட் கொடுத்துள்ளார்.

Advertisment

அப்போது மருத்துவர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவருக்கு நேற்று காலை மூச்சுத் திணறல் அதிகமாகி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

இதனைத் தொடர்ந்து இறந்த அவருக்கு கரோனா வைரஸ் பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது உடலை சி. தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன் ஏற்பாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

மேலும் இறந்துபோன தமிழ் மணியின் வீடு அமைந்துள்ள நடேசன் நகர்ப் பகுதியில் தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சியின் சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.