/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/QRG_105.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்திலிருந்து வருகிறது. இதுவரை 7 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 16 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. தற்போது சில மாநிலங்களில் கரோனா காட்டுக்குள் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர்கள் 71 பேருக்கு சில நாட்கள் முன் கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஐஐடி மாணவர்கள் அனைவருக்கும் கரோனா சோதனை செய்யப்படும் என்று ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)