தமிழகத்தில் கரோனாவால்பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கையானது 18 ஆக அதிகரித்துள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
கரோனா தொற்றுள்ள மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்டு,சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இருந்து சென்னை வந்த 65 வயது முதியவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், நியூசிலாந்தில் இருந்து சைதாப்பேட்டை வந்த 55 வயது பெண் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.